Tuesday, 6 September 2011

புனித பத்ரீசியார் ( St. Patrick )


புனித பத்ரீசியார். அயர்லாந்து நாட்டிற்க்கான பாதுகாவலர். மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் பாதுகாவலர். புனித பத்ரீசியார் தன் 16 ம் வயதில் அயர்லாந்து நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அவிசுவாசியான ஒருவரிடம் கால்நடை மேய்த்தார். பின்னர் தப்பித்து ஐரோப்பா சென்று, அயர்லாந்தின் அப்போஸ்தலராகும்படி தம்மை தயாரித்தார். முதலாம் செலஸ்தீன் பாப்பிறை இவரை ஆயராக்கி, அயர்லாந்து மக்கள் மனம்திரும்ப இவரை அங்கே அனுப்பினார். அயர்லாந்து அரசன் தன் வீரர்களை அனுப்பி புனித பத்ரீசியாரையும், அவரது தோழர்களையும் கைது செய்தான். இயேசுவின் உயிர்ப்பு விழாவன்று அரசன் முன்னிலையில் புனித பத்ரீசியார் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அழகாக எடுத்துரைத்தார். ஒரே கடவுள் மூன்று ஆட்களாயிருக்கிறார் என்பதை அரசனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது புனித பத்ரீசியார் ஒரு சிறு செடியை பிடுங்கி காண்பித்து, 'ஒரு தண்டில் மூன்று இலைகள் இருக்கின்றன. மூன்று தேவ ஆட்கள் ஒரே கடவுளாக இருக்கமுடியாதா?' என்றார். இவ்விளக்கத்தை கேட்ட மக்களும், மன்னனும், மனம்திரும்பினார்கள். இவரது நினைவுத் திருவிழா மார்ச் மாதம் 17-ம் தேதி. இவர் கி.பி.464-ம் ஆண்டு மறைந்தார்.


No comments:

Post a Comment