Tuesday, 6 September 2011

புனித சின்னப்பர் ( St. Paul )


புனித சின்னப்பர். புற இனத்தவர்க்கான அப்போஸ்தலர். எழுத்தாளர்களுக்கான பாதுகாவலர். இவரதி நினைவுத் திருவிழா ஜூன் மாதம் 29-ம் தேதி. புனித சின்னப்பர் சின்ன ஆசியாவில் உள்ள தார்கஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை உரோமை குடிமகன். புனித சின்னப்பரின் பழைய பெயர் சவுல். பரிசேயரின் கொள்கைகளை ஆர்வத்துடன் பின்பற்றி வந்தார். கூடாரம் அமைக்கும் தொழிலையும் இவர் கற்றிருந்தார். புதுமையாக இவர் மனம்திரும்பினார். இயேசுகிறிஸ்துவை புறவினத்தாருக்கு அறிவிக்கும்படி இவர் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட பயணம் மேற்கொண்டு, கடுமையாக உழைத்தார். பல்வேறு இன்னல்கள் இயேசுவுக்காக அனுபவித்தார். பின்னர் உரோமையை அடைந்து, புனித பேதுரு இராயப்பருடன் இணைந்து திருச்சபையை நிறுவினார். உரோமை அரசால் கைது செய்யப்பட்டு, மரண தண்டணை விதிக்கப்பட்டார். இவர் உரோமை குடிமனாக இருந்த காரணத்தினால், சிலுவையில் அறைந்து கொல்லாமல், கி.பி.64-ம் ஆண்டு  இவரை தலையை வெட்டிக்கொன்றார்கள்.

No comments:

Post a Comment