Tuesday, 11 October 2011

புனித யூவ்ஸ் ( St. Yves )

புனித யூவ்ஸ். இவர் சட்ட நிபுனர்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் மே மாதம் 19 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து,  கி.பி.1303 ம் ஆண்டு மறைந்தார்.



புனித விதுஸ் ( St. Vitus )


புனித விதுஸ். இவர் நடனக் கலைஞர்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் ஜூன் மாதம் 15 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து,  கி.பி.303 ம் ஆண்டு கொதிக்கும் எண்ணையில் வேகவைக்கப்பட்டு வேதசாட்சியாக கொல்லப்பட்டார்.

பராகுவே நாட்டிலுள்ள புனித விதுஸின் நினைவிடம்.


புனித ரோச் ( St. Roch )



புனித ரோச். இவர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கான பாதுகாவலர். குறிப்பாக நாய்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து, சிறை வாழ்வையேற்று, சிறையிலேயே கி.பி.1327 ம் ஆண்டு மறைந்தார்.





புனித ஆசிவாதப்பர் ( St. Benedict )


புனித பெனடிக்ட் அல்லது புனித ஆசிவாதப்பர் சிறுநீரகங்களுக்கான மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான பாதுகாவலர். இவரது நினைவு நாள் மற்றும் திருவிழா மார்ச் மாதம் 21 ம் தேதி. இவர் கி.பி.543 ம் ஆண்டு மறைந்தார்.


இன்றைய போப்பாண்டவர் பெனடிக்ட் 16 ( பதினாறாம் ஆசிவாதப்பர் ) புனித பெனடிக்ட் அல்லது புனித ஆசிவாதப்பரின் நினைவிடத்தில் ஜெபிக்கும் காட்சி.


Tuesday, 6 September 2011

புனித சின்னப்பர் ( St. Paul )


புனித சின்னப்பர். புற இனத்தவர்க்கான அப்போஸ்தலர். எழுத்தாளர்களுக்கான பாதுகாவலர். இவரதி நினைவுத் திருவிழா ஜூன் மாதம் 29-ம் தேதி. புனித சின்னப்பர் சின்ன ஆசியாவில் உள்ள தார்கஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை உரோமை குடிமகன். புனித சின்னப்பரின் பழைய பெயர் சவுல். பரிசேயரின் கொள்கைகளை ஆர்வத்துடன் பின்பற்றி வந்தார். கூடாரம் அமைக்கும் தொழிலையும் இவர் கற்றிருந்தார். புதுமையாக இவர் மனம்திரும்பினார். இயேசுகிறிஸ்துவை புறவினத்தாருக்கு அறிவிக்கும்படி இவர் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட பயணம் மேற்கொண்டு, கடுமையாக உழைத்தார். பல்வேறு இன்னல்கள் இயேசுவுக்காக அனுபவித்தார். பின்னர் உரோமையை அடைந்து, புனித பேதுரு இராயப்பருடன் இணைந்து திருச்சபையை நிறுவினார். உரோமை அரசால் கைது செய்யப்பட்டு, மரண தண்டணை விதிக்கப்பட்டார். இவர் உரோமை குடிமனாக இருந்த காரணத்தினால், சிலுவையில் அறைந்து கொல்லாமல், கி.பி.64-ம் ஆண்டு  இவரை தலையை வெட்டிக்கொன்றார்கள்.

புனித பத்ரீசியார் ( St. Patrick )


புனித பத்ரீசியார். அயர்லாந்து நாட்டிற்க்கான பாதுகாவலர். மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் பாதுகாவலர். புனித பத்ரீசியார் தன் 16 ம் வயதில் அயர்லாந்து நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அவிசுவாசியான ஒருவரிடம் கால்நடை மேய்த்தார். பின்னர் தப்பித்து ஐரோப்பா சென்று, அயர்லாந்தின் அப்போஸ்தலராகும்படி தம்மை தயாரித்தார். முதலாம் செலஸ்தீன் பாப்பிறை இவரை ஆயராக்கி, அயர்லாந்து மக்கள் மனம்திரும்ப இவரை அங்கே அனுப்பினார். அயர்லாந்து அரசன் தன் வீரர்களை அனுப்பி புனித பத்ரீசியாரையும், அவரது தோழர்களையும் கைது செய்தான். இயேசுவின் உயிர்ப்பு விழாவன்று அரசன் முன்னிலையில் புனித பத்ரீசியார் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அழகாக எடுத்துரைத்தார். ஒரே கடவுள் மூன்று ஆட்களாயிருக்கிறார் என்பதை அரசனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது புனித பத்ரீசியார் ஒரு சிறு செடியை பிடுங்கி காண்பித்து, 'ஒரு தண்டில் மூன்று இலைகள் இருக்கின்றன. மூன்று தேவ ஆட்கள் ஒரே கடவுளாக இருக்கமுடியாதா?' என்றார். இவ்விளக்கத்தை கேட்ட மக்களும், மன்னனும், மனம்திரும்பினார்கள். இவரது நினைவுத் திருவிழா மார்ச் மாதம் 17-ம் தேதி. இவர் கி.பி.464-ம் ஆண்டு மறைந்தார்.


Sunday, 4 September 2011

புனித பங்ராஸ் ( St. Pancras )


புனித பங்ராஸ். இவர் குழந்தைகளுக்கான பாதுகாவலர். பிரீஜியா நாட்டு பிரபுக் குலத்தில் பிறந்தவர். தன் 14-ம் வயதில் இவர் உரோமைக்கு வந்தார். இவரை கைது செய்து அதிகாரியின் முன் நிறுத்தினார்கள். பொய் தேவதைகளுக்கு இவர் பலிகள் செலுத்த மறுத்ததால் கிறித்தவமறைக்காக கி.பி.304-ம் ஆண்டு  மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் 12-ம் தேதி.

புனித பார்பரா ( St. Barbara )


புனித பார்பரா. இவர் கடல் பயணம், மற்றும் கப்பற்படைக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருநாள் டிசம்பர் மாதம் 4-ம் தேதி. இவர் கி.பி.303-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.


புனித மார்டீன் ( St. Martin )


புனித மார்டீன். இவர் மது அடிமைகளுக்கு பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா நவம்பர் மாதம் 11-ம் தேதி. இவர் கி.பி. 397-ம் ஆண்டு உயிர் துறந்தார்.


புனித மார்கரெட் ( St. Margaret )


புனித மார்கரெட். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா ஜூலை மாதம் 20-ம் தேதி. இவர் கி.பி. 306-ம் ஆண்டு தலை வெட்டிக் கொல்லப்பட்டார்.


புனித லூக்காஸ் (St. Luke)


புனித லூக்காஸ். இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர். மூன்றாம் நற்செய்தி நூலுக்கு ஆசிரியர். இவர் மருத்துவம் மற்றும் ஒவியக்கலைக்கு பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா அக்டோபர் மாதம் 18-ம் தேதி. இவர் கி.பி. 70-ம் ஆண்டு மரணத்தைத் தழுவினார்.

புனித மத்தேயு (St.Matthew)


புனித மத்தேயு. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர். முதல் நற்செய்தி நூலுக்கு ஆசிரியர். இவர் பணம் மற்றும் நிதிக்கு பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா செப்டம்பர் மாதம் 21-ம் தேதி. இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் வேதசாட்சியாக மரணத்தைத் தழுவினார்.

புனித மத்தேயுவின் கல்லறையுடன் கூடிய பேராலயம்.


புனித லூசி (St. Lucy)


புனித லூசி. இவர் கண்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா டிசம்பர் மாதம் 13-ம் தேதி. இவர் கி.பி.303-ம் ஆண்டு குத்திக்கொல்லப்பட்டார்.


புனித லியோனார்டு (St. Leonard)


புனித லியோனார்டு. இவர் குற்றவாளிகளுக்கான பாதுகாவலர். (குற்றவாளிகள் மனம் மாறுவதற்க்கான) இவரது நினைவுத் திருவிழா நவம்பர் 6-ம் தேதி. இவர் கி.பி.559-ம் ஆண்டு மறைந்தார்.

புனித ஹூபர்ட் (St. Hubert)


புனித ஹூபர்ட். இவர் வேட்டையாடுபவர்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா நவம்பர் மாதம் 3-ம் தேதி. இவர் கி.பி.727-ம் ஆண்டு இறைவனடி அடைந்தார்.


புனித பிரான்சிஸ் சேவியர் (St. Francis Xavier)


புனித பிரான்சிஸ் சேவியர். நற்செய்தி அறிவிக்கும் வேதபோதக சபைகளுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா டிசம்பர் மாதம் 3-ம் தேதி. இவர் கி.பி.1553-ம் ஆண்டு சீனாவின் அருகிலுள்ள சான்சியன் தீவில் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தார். ஆனால் இவரது உடல் இன்றும் அழியாமல் உள்ளது.

கோவாவிலுள்ள புனித குழந்தை இயேசு பேராலயத்தில் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் பாதுகாக்கப்பட்டு வரும் காட்சி


புனித டெனிஸ் (St. Denis)


புனித டெனிஸ். இவர் பிரான்ஸ் நாட்டுக்கான பாதுகாவலர். இவர் கி.பி.272-ம் ஆண்டு வாழ்ந்தவர். இவரது நினைவுத் திருவிழா அக்டோபர் மாதம் 9-ம் தேதி. இவர் மவுண்ட் மார்ட் (இரத்த சாட்சிகளின் மலை) என்ற இடத்தில் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்.

புனித டெனிஸின் பேராலயத்துடன் கூடிய கல்லறை.


புனித கிளாரா (St. Clare)


புனித கிளாரா. இவர் தொலைக்காட்சிக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா ஆகஸ்ட் 12-ம் தேதி. இவர் கி.பி.1253-ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார்.


750 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் பாதுகாக்கப்பட்டுவரும் புனித கிளாரா உடல்.



Saturday, 3 September 2011

புனித போனிபேஸ் ( St. Boniface )


புனித போனிபேஸ். இவர் ஜெர்மனி நாட்டுக்கான பாதுகாவலர், இவரது நினைவுத் திருநாள் ஜூன் மாதம் 5-ம் தேதி. இவர் கி.பி. 755-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.


புனித ஆக்னஸ் (St .Agnes)


புனித ஆக்னஸ். இவர் இளம்பெண்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருநாள் சனவரி மாதம் 21-ம் தேதி. இவர் கி.பி.304-ம் ஆண்டு தலை வெட்டி கொல்லப்பட்டார்.


புனித கஜெதான் (St. Cajetan)


புனித கஜெதான். வேலை தேடுபவர்களின், வேலை இல்லாதவர்களின், வேலை தரும் துறைகளுக்கு பாதுகாவலர்.இவரது நினைவுத் திருநாள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி. இவர் கி.பி. 1547-ல் மறைந்தார்.


புனித செபாஸ்டியன் (St. Sebastian)


மன்னரே தெய்வம் என்ற கொள்கை வலுப்பெற்று, மன்னர் வாக்கே தெய்வ வாக்கு என்றிருந்த காலத்தில் உரோமை நகரில் கிறிஸ்தவம் பரவி, அன்றைய தப்பான எண்ணங்களுக்கு சவால் விட்டது. அவ்வேளையில் பேரரசர் தியோக்கிளேசியன், தான் வெற்றி பெற்ற உரோமானிய கீழ்த்திசை நாடுகளுக்கு மன்னனாக தன் தம்பி மாக்சிமியனை நியமித்திருந்தார்.

கிறிஸ்தவம் பரவிவருவதைக்கண்ட பேரரசர், தன் தம்பி மாக்சீமியனுக்குக் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கக் கேட்டுக்கொண்டார். கொடுங்கோலரான மன்னர் மாக்சிமியன், கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பாதிச் சொத்தும் மீதி மன்னருக்கும் என்று ஆணை பிறப்பித்தார்.

மாக்சிமியனுக்குப் படைத்தளபதியாகவும், அந்தரங்க மெய்க்காப்பாளராகவும், நண்பராகவும் செபஸ்தியார் என்ற ஒருவர் இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது மன்னருக்கோ உயர் அதிகாரிகளுக்கோ தெரியாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டக் கிறிஸ்தவர்களுக்கு உணவு வழங்கி, ஆறுதல் கூறி, ஆதரித்து வந்தார் செபஸ்தியார். ஆனால் சிறைத் தலைவன் நிக்கோஸ் கிராஸ்துஸ், தளபதியே நான் சிறைக்கதவை பூட்டி என் கடமையைச் செய்யவேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறுவதுண்டு. அவன் மனைவி ஜோயே,பக்கவாதத்தால் தாக்கப்பட்டு ஆறு வருடங்களாக ஊமையாய் இருப்பதை அறிந்து உருக்கமாய் செபித்து அவள் நாவில் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார் செபஸ்தியார். சிறை அதிகாரி நிக்கோஸ் கிராஸ்துஸ் மனம் மாறினார். புது கிறிஸ்தவர்களை தம் வீட்டிலேயே பாதுக்காப்பாக வைப்பதாகக் கூறினார்.

உரோமைப் பேரரசின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரத்தளபதியாகிய செபஸ்தியார், உரோமானிய இளைஞர்களைப்போல் அன்றி, ஒழுக்கத்திலும் நற்குணங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்த்த பேராசைக்காரன் புல்வியன், இவர் கிறிஸ்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று சந்தேகம் கொண்டான். மன்னரிடம் செபஸ்தியார் குறித்த உண்மை உரைக்கப்பட்டது. இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்த படைத்தளபதி நன்றி கெட்டவரா எனக் கோபம்கொண்ட மன்னர் மாக்சிமியன், ‘செபஸ்தியாரை இன்று இரவே 2 மணிக்குமேல் காட்டுப்பக்கம் கொண்டு சென்று மரத்தில் கட்டிவைத்து, அணு அணுவாக வேதனைப்படுத்தி சல்லடையாக அம்பால் துளைத்து, சித்திரவதைப்படுத்தி, கொல்லுங்கள்’ என்று கோபாவேசமாக கட்டளையிட்டார். காட்டில் பட்டமரத்தில் கட்டிவைத்து மன்னனின் கட்டளைப்படி அம்பால் எய்த வில்வீரர்கள், அவர் இறந்துவிட்டார் என நினைத்து சென்றுவிட்டனர்.

அங்குவந்த சில கிறிஸ்தவ வீரர்களால் காப்பாற்றப்பட்ட செபஸ்தியார், மற்றவர் தடுத்தும் கேளாமல் மன்னரைக் காணச்சென்றார். குற்றமற்றவர்களையும் கொன்று குவிக்கிறாயே, என அவர்கள் சார்பில் நீதி கேட்டார். கோபம் கொண்ட மன்னர் அவர் உயிருடன் இருப்பதைக்கண்டு, அவரை இழுத்து வந்து, தன் முன்னிலையில் தடியால் அடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டார். ஆணை உடனே நிறைவேற்றப்பட்ட நாள் கி.பி 288ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி. செபஸ்தியாரின் திரு உடல் சுரங்கக் கல்லறையில் புனித பேதுரு, பவுல் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

மறைசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதை மெய்யாக்கிய இந்தப் படைத்தளபதிதான் புனித செபஸ்தியார்.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, அத்லெட் வீரர்களுக்கு, மற்றும் விளையாட்டு துறைக்கான பாதுகாவலர். இவரது காலம் கி.பி.268-ம் ஆண்டு. இவரது நினைவுத் திருவிழா சனவரி மாதம் 20-ம் தேதி. இயேசுவுக்காக அம்புகளால் குத்தபட்டு மரணத்தை தழுவினார்.

நன்றி : அருட்தந்தை மைக்கேல் ராஜ் செல்வம் 


உரோமையுலுள்ள புனித செபஸ்தியாரின் கல்லறையுடன் கூடிய தேவாலயம்.


புனித செசிலியா (St.Cecilia)



புனித செசிலியா. இசை கலைஞர்களுக்கான பாதுகாவலர். மற்றும் தொலைந்து போன பொருட்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா நவம்பர் 22-ம் தேதி. இவர் கி.பி. 280-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

வாடிகன் பேராலாயத்தில் உள்ள புனித செசிலியாவின் கல்லறை 


புனித நிக்கோலஸ் ( St. Nicholas)


புனித நிக்கோலஸ். பணம் - பொருள் தேவைகளுக்கான பாதுகாவலர். இவரது நினைவு திருவிழா டிசம்பர் மாதம் 6-ம் தேதி. இவர் கி.பி.346-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி மறைந்தார்.


Monday, 29 August 2011

புனித ஆட்ரியன் (St. Adrian)


புனித ஆட்ரியன். 

இராணுவ வீரர்களுக்கான பாதுகாவலர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.290-ம் ஆண்டு. இவரது நினைவுத் திருவிழா செப்டம்பர் மாதம் 8-ம் தேதி.  இவர் இரும்புக்கொல்லர் மேடையில் வைத்து கைகள் வெட்டப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டு இயேசுவுக்காகக் கொல்லப்பட்டார்.

புனித வனத்து அந்தோணியார் (St. Anthony the Abbot)



புனித வனத்து அந்தோணியார். விலங்கினங்களின் பாதுகாவலர். வனாந்தரத்தில் தனிமையில் செபித்து வாழ்ந்த எளிய துறவி. இவரது நினைவுத் திருவிழா சனவரி மாதம் 17-ம் தேதி, கி.பி.356-ம் ஆண்டு காலமானார்.


புனித புளோரியன்( St.Florian)


புனித புளோரியன்.

தீயணைப்பு வீரர்களுக்கான பாதுகாவலர், இவர் கி.பி.300-ம் ஆண்டில் வாழ்ந்தவர், இவரது நினைவுத் திருழா மே மாதம் 4-ம் தேதி. இயேசுவுக்காக சித்தரவதை பட்டு இறந்தார்.

Sunday, 28 August 2011

புனித இசிதோர் (St. Isidore of Seville)


புனித இசிதோர். தற்கால கம்ப்யூட்டர், மற்றும் இன்டர்நெட் போன்றவைகளுக்கு பாதுகாவலராக உள்ளவர். இவரின் நினைவுத்திருநாள் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி. கி.பி.636 ஏப்ரல் மாதம் 4-ம் தேதி இவை காலமானார்.


புனித ரபேல் அதிதூதர் (St. Raphael the Archangel)


புனித ரபேல் அதிதூதர் இறைவனின் தலைமை தூதர்களில் மூவரில் ஒருவர். இவர் நோய்களிலிருந்து குணமடைவதற்க்கான பாதுகாவலராக திகழ்கிறார்.
இவருடைய நினைவு / திருவிழா செப்டம்பெர் 29-ம் தேதி.

புனித அன்னம்மாள் (St. Anna)


புனித அன்னம்மாள். 
இறைவனின் தாயான அன்னை மரியாளின் தாயாராவார். இறைவனின் அன்னையை தன் வயிற்றில் சுமக்கும் பேறுபெற்றவர். இவர் அன்னையர்களுக்கும், குடும்பத்திற்கும் பாதுகாவலராக இருக்கிறார். இவரது திருவிழா ஜூலை மாதம் 26-ம் தேதி இவர் நினைவாக கொண்டாடப்படுகிறது.


புனித. பதுவை அந்தோணியார் (St. Anthoni of Paduva)


கோடி அற்புதர் என புகழப்படும் புனித. பதுவை அந்தோணியார். அற்புத அடையாளங்களுக்கான பாதுகாவலராகவும், இளஞ்சிறார்களுக்கான பாதுகாவலராகவும் உள்ளார். இவரது திருவிழா ஜூன் மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவர் கி.பி.1231-ல் இறைவனடி சேர்ந்தார்.

சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வைக்கு வைக்கப்பட்ட புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல்.


 புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல். அழியாத நாக்கு.

புனித வாலன்டைன் (St.Valentine)



புனித வாலன்டைன். அன்பிற்கும், நட்பிற்கும் பாதுகாவலர். இவரது நினைவுத் திருநாள் பிப்ரவரி 14-ம் தேதி.


புனித. பேதுரு (இராயப்பர்) (St. Peter)


புனித. பேதுரு (இராயப்பர்) இயேசுவின் முதன்மை சீடர், இயேசுவிற்கு பின் திருச்சபைக்கு தலைமை வகித்தவர்.
மனித வாழ்விற்கும், மீனவர்களுக்கும் பாது காவலராக திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கி.பி. 64-ம் ஆண்டு உரோமை ஆட்சியாளர்களால் தலைகீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.


புனித கிறிஸ்டோபர் ( St. Christopher)

புனித கிறிஸ்டோபர். பயணங்களுக்கும், உடல் பலத்துக்கும், பாதுகாவலர்.
இவருடைய திருவிழா ஜூலை 25 ம் தேதி.
இவர் கி.பி.250-ல் தலை வெட்டப்பட்டு இறைவனுக்காக உயிர் நீத்தவர்.